Breaking News

தனிக்குடித்தனம் நடத்த மனைவி கட்டாயபடுத்தினால் கணவர் விவகரத்து செய்யலாம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

பெற்றோரிடம் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் வரும்படி மனைவி வற்புறுத்தினால் கணவர் விவாகரத்து செய்யலாம் என்று கொல்கத்தா நீதிமன்றம் கூறியுள்ளது.



மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கு மிட்னாப்பூர் குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில், குமார் மண்டல் தனது மனைவியை விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தார் அந்தவழக்கில் அவரது மனைவி தன்னை தனிக்குடித்தனம் செல்ல வர கட்டாயப்படுத்துகின்றார் என கூறி இருந்தார் அவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து அவரது மனைவி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்மனு நீதிபதிகள் செளமன் சென் மற்றும் உதய் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரையும் விசாரனை செய்த நீதிபதிகள்

இந்தியக் குடும்பத்தில் திருமணத்திற்கு பிறகு மகன்கள் தங்களது பெற்றோருடன் வசிக்க வேண்டும்.சமூகத்தின் இயல்பான நடைமுறையில், இருந்து மகனை மாற்ற மனைவி முயற்சிக்கும்போது, அதற்கு நியாயமுள்ள காரணங்கள் இருக்க வேண்டுமென்று நீதிமன்றம் கூறிஉள்ளது.

மேலும், குடும்பத்தைவிட்டு, மற்றும் பெற்றோரைவிட்டு, மகன் தனியே பிரிந்து வர விரும்ப மாட்டார்கள் ஆகவே திருமணத்திற்குப் பிறகு கணவனை பெற்றோரிடமிருந்து மனைவி பிரிக்க முயன்றால் மனைவியிடமிருந்து கணவன் விவாகரத்துக் கோரலாம். என கூறிய நீதிபதிகள் கீழ் கோர்ட் வழங்கிய விவாகரத்தை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback