கனடாவில் நடுக்கடலில் கப்பலை துண்டு துண்டாக நொறுக்கிய சுறா என பரவும் வீடியோ உண்மை என்ன Aleksey
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கனடாவில் சுறா மீன் தாக்கியதில் உருக்குலைந்த கப்பல் என ஓர் வீடியோவை
பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கிராபிக்ஸ் வீடியோ ஆகும், ஆனால் பலரும் அதனை உண்மை என நம்பி ஷேர் செய்கின்றார்கள்
அலெக்ஸி என்ற கிராபிக்ஸ் கலைஞர் இந்த வீடியோவை அனிமேஷன் செய்துள்ளார். என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது.
மேலும் Aleksey அந்த வீடியோவை தனது யூடியூப்பில் பதிவிட்டுள்ளார் அதேபோல் பல கற்பனை வீடியோக்களையும் தனது யூடியூப்பில் பதிவிட்டுள்ளார்
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி

