Breaking News

25 மாவட்டங்களில் கன மழை எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா முழு விவரம்

அட்மின் மீடியா
0

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்க்கு 25 மாவ்ட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



Nilgiris, 

Coimbatore, 

Erode, 

Tiruppur,

Kanniyakumari, 

Tenkasi, 

Tirunelveli, 

Ramanthapuram, 

Theni,

Dindugal,

Sivaganga, 

Virudunagar, 

Madurai, 

Tiruchirapalli, 

Thanjavur, 

Tiruvarur,

Cuddalore, 

Villupuram, 

Kallakurichi, 

Perambalur, 

Salem,

Namakkal, 

Dharmapuri, 

Tiruvannamalai, 

Vellore 

and Tirupattur 

அதே போல் நாளை 01.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

02.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback