Breaking News

இந்தியாவில் அதிகரிக்கும் Influenza H3N2 வைரஸ் காய்ச்சல், இருமல் இருந்தால் இந்த மாத்திரைகளை சாப்பிடாதீர்கள் -இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இன்ஃப்ளுயன்சா எச்3என்2 வைரஸ் Influenza H3N2 பாதிப்பு அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் என்பது வைரஸ் காய்ச்சல். அதாவது, பரவக் கூடிய வைரஸ் காய்ச்சல். லேசான சளி, லேசான தொண்டை வலி, லேசான இருமல் என்று எப்படி வேண்டும் என்றாலும் இந்த வைரஸ் காய்ச்சல் வரலாம். இந்தக் காய்ச்சல் பாதிப்பு சில நேரங்களில் தெரியாமல் கூட இருக்கலாம். லேசான காய்ச்சல் தொடங்கி தீவிர காய்ச்சல் பாதிப்பு ஏற்படலாம்.

இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக எச்3என்2 வகையை சேர்ந்த இன்புளூயன்சா ஏ என்ற வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இதனால், தொடர்ச்சியான இருமல் மற்றும் அதனுடன் கூடிய காய்ச்சலும் காணப்படும். எச்3என்2 வகையைச் சேர்ந்த இன்புளூயன்சா ஏ வைரஸ் பாதிப்பு பரவி வருவதால், மக்கள் பலர் இருமல் , காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மற்ற இன்புளூயன்சாவைவிட இந்த வகை இன்புளூயன்சாவினால்தான் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த பருவ காய்ச்சலானது 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். 3 நாட்களுக்கு பின்னர் காய்ச்சல் போகும். ஆனால், இருமல் 3 வாரங்கள் வரை தொடரும். மேல் சுவாச குழாய் பகுதியில் தொற்றும், காய்ச்சலும் ஏற்படும் என்றும் 

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது. பெரும்பாலும் 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஏற்படுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகள் தரக்கூடாது. எனவே, Azithromycin and Amoxiclav, amoxicillin, norfloxacin, oprofloxacin, ofloxacin, levofloxacin மாத்திரைகள் பரிந்துரைக்க வேண்டாம்  என ஐ.எம்.ஏ. கேட்டு கொண்டு உள்ளது.இதுபோன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை அடிக்கடி எடுத்து கொள்ளும்போது, நோயெதிர்ப்பு திறன் குறைந்து போவதுடன், உண்மையான தேவையாக இருக்கும்போது எடுத்து கொண்டால், அது பலனளிக்காமல் போய் விடும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

https://twitter.com/IMAIndiaOrg/status/1631671823086546945

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback