பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் கழுத்தறுத்து படுகொலை
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெகன் என்ற இளைஞர், சரண்யா என்ற பெண்ணை காதலித்துள்ளார் இவர்களின் திருமணத்திற்கு சரண்யாவின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர், ஆனால் பெண்வீட்டாரின் எதிர்ப்பை மீறி அப்பெண்ணை கடந்தமாதம் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில்,இன்று கே.ஆர்.பி. அணை அருகே பைக்கில் சென்ற ஜெகனை பெண் வீட்டார் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்துள்ளார்.இதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். இந்த கொடூரக்கொலை குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த கொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்