Breaking News

மேற்கு வங்கம் ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள காசிபாரா பகுதியில் ராம நவமியையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், கடைகளும் சூறையாடப்பட்டன. இந்த கலவரத்தில் 10 பேர் காயமடைந்துள்ள நிலையில், கலவரம் தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 



மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வன்முறை:-

நாடு முழுவதும் மார்ச் 30ஆம் தேதி ராம நவமி விழா கொண்டாடப்பட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே காசிபாரா பகுதியில் ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது

வன்முறையில் இறங்கிய கும்பல் வாகனங்கள் மீது கற்கள் வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் அட்டூழியம் செய்தனர். இதனால் அங்கு  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் நிலைமையை சமாளிக்க காவலர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த வன்முறையில் காவல் துறையின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றத்தை குறைக்க காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி:-

நான் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்க மாட்டேன். ராம நவமி பேரணியில் மோதலை ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback