Breaking News

வானில் நிகழும் அற்புதம் இன்று மாலை நிலவுக்கு அருகே செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் கிரகங்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்

அட்மின் மீடியா
0

இன்று மாலை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிழமை அன்று மேற்கு திசையில் நிலவை ஒட்டி செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வருவதைக் காண முடியும்.

உலகின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் வெறும் கண்களால் இந்த நிகழ்வை காண முடியும் என்ற போதும் வியாழன், வெள்ளி, செவ்வாய் போன்ற பிரகாசமான கிரகங்கள் நன்றாக தெரியும்.புதன் மற்றும் யுரேனஸ் ஆகிய கிரங்கங்களை பைனாகுலர் கொண்டு பார்க்க முடியும்  யுரேனஸ் கிரகம் வெள்ளி கிரகத்திற்கு மேலே பச்சை நிறத்தில் மிளிரும் 

மாலை சூரியன் அஸ்தமித்த பிறகு தொடுவானம் அருகே ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இந்த ஐந்து கிரகத்தையும் ஒன்றாக பார்க்க முடியும் என்றும் அதற்கு வானமும் தெளிவாக இருந்தால் அனைவரும் வெறும் கண்களாலும் பார்க்க முடியும்  பைனாகுலர் மூலம் பார்ப்பது சிறந்ததாக இருக்கும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை அதனை ஓரளவு காண முடியும். 

வெள்ளி மிகவும் பிரகாசமாக இருக்கும் அதனையும் பார்க்கலாம்

செவ்வாய் கிரகம் நிலவுக்கு அருகில் சிவப்பாய் ஒளிரும். 

ஆனால் புதனும், யுரேனசை கண்டுபிடிப்பதுதான் கொஞ்சம் சிரமம். வெள்ளிக்கு மேலே அது பச்சையாக மிளிரும் 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback