Breaking News

போலி டாக்டா் பட்டம் விவகாரம் ஹரிஷ் கைது

அட்மின் மீடியா
0

போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணைய இயக்குநர் ஹரிஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கம் அரசுத் துறைகள், அரசுடன் இணைந்து செயல்படும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் மாணவா்கள் அமைப்புகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.அந்த வகையில் சா்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் எனும் தனியாா்அமைப்பு விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக அண்ணா பல்கலை. அனுமதி வழங்கியிருந்தது. 

அதன்படி விவேகானந்தா் அரங்கத்தில் கடந்த பிப்.26-ஆம் தேதி நடைபெற்ற விருது விழாவில் இசையமைப்பாளா் தேவா, நடிகா் வடிவேலு, நடிகா் கோகுல், நடன இயக்குநா் சாண்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளா் ஈரோடு மகேஷ் உள்பட 40 பேருக்கு கெளரவ டாக்டா் பட்டங்கள் வழங்கப்பட்டன.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழகம் தான் இந்த விருது வழங்கியது போல் செய்தி பரவியது

இது குறித்து சென்னையில் அண்ணா பல்கலை. துணைவேந்தா் வேல்ராஜ் செய்தியாளா்களிடம்  

அண்ணா பல்கலைகழகம் சார்பில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதியையும் அண்ணா பல்கலைகழகத்தையும் ஏமாற்றியுள்ளனர். தனியார் நிறுவன பட்டமளிப்பு விழாவுக்காக அண்ணா பல்கலைகழக அரங்கத்தை பயன்படுத்தியுள்ளனர். 

புனிதமான அண்ணா பல்கலைகழகத்தில் இது போன்ற தவறான செயல் நடந்ததற்கு வருந்துகிறோம்.இது குறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் ஆளுனரின் செயலாளர், உயர்கல்வித்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி அண்ணா பல்கலைகழக அரங்கை வாடகைக்கு விடுவதில் கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவோம் என்றும், தனியாருக்கு அரங்கு வாடகைக்கு விடுவதை நிறுத்த உள்ளதாகவும் கூறியிருந்தார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்  அதன்படி, ஏமாற்றுதல், மோசடி செய்தல், அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்துதல், தகுதியற்றவருக்கு டாக்டர் பட்டம் வழங்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹரிஷ் சார்பில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விருது வழங்கியதில் எந்தவித முறைகேடும் இல்லை.அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், விருது பெற்ற பிரபலங்களுக்கும் தொடர்பு ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்ட வந்த ஹரீஷ் மற்றும் இடைத்தரகர் கருப்பையா ஆகியோர் ஆம்பூர் அருகே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback