Breaking News

தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சுகாதாரத்துறை வெளியீடு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இந்த ஆண்டு அதிக அளவில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் குழந்தைகள், வயதானோர், கப்பிணிகள் முடிந்த வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது



வெப்ப அலை  என்றால் என்ன:-

வெப்ப அலை என்பது இயல்பு வெப்ப நிலையை விட கூடுதலாக 3oC வெப்ப உயர்வு தொடர்ச்சியாக 3 தினங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதை குறிக்கும்.உலக வானிலை ஆய்வு அமைப்பானது தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் இயல்பு வெப்பநிலையை விட 5oC அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படும் என வரையறை செய்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:-

வெயில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். 

மதியம் 12 -3 மணி வரை மக்கள் அதிகமாக வெளியே செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும்.

உடல் சூட்டை குறைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

தேநீர், காபி மற்றும் கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் அருந்துவதால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் என்பதால் மேற்படி பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.

உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை குறைத்துக்கொண்டு சூட்டை தணிக்கும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

வெளியில் செல்லும் போது தண்ணீர் பாட்டில்களை உடன் கொண்டு செல்லவும்.

உடலில் ஏற்படக் கூடிய நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் வண்ணம் உப்பு-சர்க்கரை கரைசல், இளநீர், வீட்டுமுறைப் பானங்களான லஸ்ஸி, அரிசி கஞ்சி, எலுமிச்சை சாறு, மோர் போன்ற பானங்களை பருகவும்

வெயிலில் செல்ல வேண்டியிருந்தால் குடை, உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்

பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.தோலில் எரிச்சல், அதிக சூடு, சூடு கட்டிகள், வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

குளிர்ந்த நீரில் குளியல் 

சூரிய ஒளி நேரடியாக படும் வண்ணம் பணிகள் மேற்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback