Breaking News

ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 ஆசிரியர்கள் நலன் காக்க பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



ரூ. 255 கோடி செலவில் ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆசிரியர்களுக்கு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். 

அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவார்கள்

அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும். 

அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். 

உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கப்படும் கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.











Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback