Breaking News

அபுதாபியின் பட்டத்து இளவரசராக ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் நியமனம் முழு விவரம் Abu Dhabi Crown Prince Sheikh Khaled bin Mohamed bin Zayed

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது மூத்த மகன் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத்தை அபுதாபி நாட்டின் பட்டத்து இளவரசராக நியமித்துள்ளார்.

 


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது ஏழு எமிரேட்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு, இதில் அபுதாபி, அஜ்மான், துபாய், ஃபுஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம் அல் குவைன். இதில் அபுதாபி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் தலைநகராக உள்ளது

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது மூத்த மகன் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத்தை அபுதாபி நாட்டின் பட்டத்து இளவரசராக நியமித்துள்ளார்.மேலும்  அபுதாபியின் துணை ஆட்சியாளராக ஹஸ்ஸா பின் சயீதையும், அபுதாபியின் துணை ஆட்சியாளராக தஹ்னூன் பின் சயீத்தையும் நியமித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் மூத்த மகனான ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஜனவரி 8, 1982 அன்று அபுதாபியில் பிறந்த அவர்  அபுதாபியில் பிறந்து உயர்நிலைப் பள்ளி படிப்பை வரை அமீரககத்திலேயே பயின்று தனது உயர்கல்வியை அமெரிக்காவில் முடித்த ஷேக் மன்சூர், 1993 ம் வருடம் சர்வதேச உறவுகள் பாடத்தில் இளங்கலைப் பட்டமும் (Bachelor's degree in International Relations) பெற்றுள்ளார்.

அபுதாபி நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், அபுதாபி நிர்வாக அலுவலகத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் கடந்த 2022 ம் ஆண்டு அமீரகத்திற்கு வருகை தந்த இங்கிலாந்து இளவரசர் வில்லியமுடன் இணைந்து, அபுதாபியில் உள்ள ஜுபைல் சதுப்புநில பூங்காவில் அபுதாபி சதுப்புநில முன்முயற்சியையும் ஷேக் காலித் தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது அபுதாபியின் புதிய பட்டத்து இளவரசராக ஷேக் முகமது பின் சயீத் அவர்களின் மூத்த மகன் ஷேக் காலித் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback