Breaking News

2023 ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு Updated Tentative Annual Recruitment Planner- 2023

அட்மின் மீடியா
0

தமிழக அரசு பணிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராக் ஆண்டுதோறும் அட்டவணை வெளியிடப்படுகின்றது



அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே வெளியிட்டது. தற்போது 2023-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வுக் கால அட்டவணையை  வெளியிட்டுள்ளது. 

அதில், புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

உதவி ஜெயிலர் (59 காலியிடம்), 

அரசு போக்குவரத்து கழக மேலாளர் - சட்டம் (14), 

எஸ்எஸ்எல்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ கல்வித் தகுதி தேவைப்படும் தொழில்நுட்ப பணிகள் (130), 

பட்டப் படிப்புடன் தொழில்நுட்பக் கல்வித் தகுதி உடைய பணிகள் (400), 

தடயவியல் துறை இளநிலை அறிவியல் அலுவலர் (29), 

தடயவியல் துறை ஆய்வக உதவியாளர் (25), 

உதவி வேளாண் அலுவலர் (81), 

உதவி தோட்டக்கலை அலுவலர் (120) 

என பல்வேறு பணிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது


2023 ம் ஆண்டுக்கான தேர்வுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ பக்கமான www.tnpsc.gov.in -க்கு செல்லுங்கள்

அடுத்து அதில் Updated Tentative Annual Recruitment Planner- 2023 என்பதை கிளிக் செய்யுங்கள்

அதில் 2023 ம் ஆண்டின் புதுப்பிக்கப்பட்ட வருடாந்திர திட்டம் Annual Planner 2023 - Updated  பி.டி.எஃப் ஓபன் ஆகும்

அதில் புதுப்பிக்கப்பட்ட தேர்வுகளின் தேதிகள் மற்றும் விவரங்கள் அதில் வரும். அதைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

அல்லது கீழ் உள்ள இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்:-

https://www.tnpsc.gov.in/static_pdf/annualplanner/ARP_2023_ENG_UPDATED.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback