Breaking News

கொரோனாவால் வெளிநாட்டில் வேலையிழந்தவர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் 15 லட்சம் வரை கடன்.. தமிழக அரசின் திட்டம் முழு விவரம் உள்ளே! MEGP

அட்மின் மீடியா
0

கொரோனாவால் வெளிநாட்டில் வேலையிழந்தவர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் 15 லட்சம் வரை கடன்.. தமிழக அரசின் திட்டம் முழு விவரம் உள்ளே!

கோவிட் 19 தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்கிட விழைவோரை ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் MIGRANTS EMPLOYMENT GENERATION PROGRAMME (MEGP)



விண்ணப்பிக்க தகுதியான நபர்கள்:-

வயது வரம்பு:-

18 வயது முதல் 45 வயது வரை (பொது பிரிவினருக்கு) 

18 வயது முதல் 55 வயது வரை (பெண்கள் SC, ST, BC, MBC, சிறுபான்மையினர் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு), 

குறைந்தபட்ச கல்வித் தகுதி:-

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வெண்டும்.

வேலைவாய்ப்பு விசாவுடன் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்திருக்கவேண்டும் 

01.01.2020 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டிலிருந்து தமிழகம் திருப்பியவராக இருத்தல் வேண்டும்.

திட்ட விவரங்கள்:-

அதிகபட்ச திட்ட செலவு - உற்பத்தி (Manufacturing) துறைக்கு ரூ.15 இலட்சம்.

 அதிகபட்ச திட்ட செலவு - சேவை (Service) மற்றும் வணிக (Business) துறைக்கு ரூ.5 இலட்சம்

தொழில் தொடங்குவோரின் பங்களிப்பு & மானிய உதவிகள்:-

தொழில் முனைவோரின் முதலீடு - பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10% 

தொழில் முனைவோரின் முதலீடு - சிறப்புப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 5%, 

அரசின் மானியத்தொகை திட்ட மதிப்பீட்டில் 25% அதிகபட்சமாக ரூ.2.5 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.


விண்ணப்பிக்க தேவைப்படும் சான்றுகள்-

கடவு சீட்டு (Passport), 

விசா நகல் (Visa Copy), 

கல்விச் சான்று, 

இருப்பிடச் சான்று, 

சாதிசான்று, 

மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று 

திட்ட விபரங்கள்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:-

பயனாளிகள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தொழில் மையங்களில் (அ) தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு:-

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), 

மாவட்ட ஆட்சியர் தொழில் மையம்.

தருமபுரி,


அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், 

எழிலகம், 

சேப்பாக்கம், 

சென்னை

https://www.rrtamils.tn.gov.in/en/

https://www.msmetamilnadu.tn.gov.in

Tags: முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback