Breaking News

110 யூடியூப் சேனல்களுக்கு தடை என மத்திய அமைச்சர் தகவல்!

அட்மின் மீடியா
0

1நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரிகளுக்கு 2021-ம் ஆண்டு முதல் தற்போதுவரை மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. என மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் இத்தகவலை தெரிவித்துள்ளார்


காங்கிரஸ் கட்சியின் அசாம் மக்களவை உறுப்பினர் Pradyut Bordoloi எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அனுராக் தாகூர், பத்திரிகை தகவல் அலுவலகத்தின், உண்மையை சரிபார்க்கும் பிரிவு, ஆயிரத்து 160 செய்திகள் பொய்யானவை என்று கண்டுபிடித்துள்ளது. 

நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரிகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் ஊடகங்களை நெறிமுறைப்படுத்த 2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளைக் கொண்டுவந்தது. இந்த புதிய விதிமுறையின் கீழ் தவறும் செய்யும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021 டிசம்பர் முதல் தற்போது வரை, 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 சமூக ஊடக கணக்குகளை (இணையதளங்கள்/ இணைய பக்கங்கள், சமூக ஊடக கணக்குகள்) செய்வதற்கான உத்தரவுகளை தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தால் பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback