Breaking News

4500 பேரை பலிவாங்கிய துருக்கி நிலநடுக்கம் உலகை உலுக்கிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு Turkey earthquake viral image

அட்மின் மீடியா
0

துருக்கி நிலநடுக்கம் உலகை உலுக்கிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு

 

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தில் துருக்கி - சிரியா எல்லை அருகே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. 

நிலநடுக்கத்தால் பெரிய கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதை அடுத்து அதிகாலை வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

தென்கிழக்கு துருக்கியின் காலியென்டெப் பகுதியில் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன, இதனால் மக்கள் எல்லாரும் கட்டடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் இறங்கியுள்ளனர்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. 

மேலும் துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது.

இதுவரை நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். 

துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக, சிரியாவிலும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அங்கும் தீவிர மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

துருக்கியின் தொழில்நகரான காசியான்டேப் நகரில் ஏற்பட்ட பூகம்பம் துருக்கியையும், சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதுவரை 4500 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது, இதில் பல குழந்தைகள் கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள்,

மீட்பு பணிகள் நடந்து கொண்டு இருக்கும் போதே பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுகின்றது, பார்போரை கதிகலங்க வைத்துள்ளது











image courtesy twitter

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback