Breaking News

ஈஷா மையத்திற்கு கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார் என பரவும் வதந்தி உண்மை என்ன? isha foundation cm karunanidhi

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஜக்கி காட்டை அழிக்கிறார் என்று கூப்பாடு போடும் உபி கள் கவனத்திற்கு அவருடைய இந்த ஈஷா மையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் அய்யா கருணாநிதி தான் எத்தனை பேருக்கு தெரியும். என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-


உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படத்தை  நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு ஆராய்ந்தது, மேலும் அந்த புகைப்படத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் கடந்த 2007 ம் ஆண்டு  ஈஷா சார்பில் 25 மில்லியன் மரங்கள் நடும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை அண்ணா பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்றது. 

அதில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி மரம் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார் என ஈஷா மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் செய்தியாக வெளியாகி உள்ளது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

ஜக்கி காட்டை அழிக்கிறார் என்று கூப்பாடு போடும் உபி கள் கவனத்திற்கு அவருடைய இந்த ஈஷா மையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் அய்யா கருணாநிதி தான் எத்தனை பேருக்கு தெரியும். என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். நமக்கு அதில் ஓர் சந்தேகம் எழுந்தது

பொதுவாக கட்டிடம் அடிக்கல் நாட்டுவது என்றால் அதற்க்கு செங்கல் கொண்டுதான் அடிக்கல் நாட்டுவார்கள் , பூஜை செய்வார்கள், ஆனால் அதில் மரகன்று ஒன்றை நடுகின்றார்கள் அதனை கட்டிட அடிக்கல் நாட்டல் என பொய்யாக உள்ளதே என சந்தேகம் எழுந்தது

அதன்பின்பு நம் அட்மின் மீடியா அந்த செய்தியின் உண்மை தெரிய களம் கண்டது அதன் முடிவில் ஈஷா மையம் கடந்தவ்1992 ம் ஆண்டு தொடங்கப்பட்டது என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் நாம் தேடிய வரையில் ஈஷா மையம் தொடங்க அடிக்கல் நாட்டியவர் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் என எங்கும் எதிலும் செய்திகள் கிடைக்கவில்லை 




முடிவு:-

1992 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஈஷா மையத்தில் 2007 ம் ஆண்டு நடந்த மரம் நடும் விழாவிற்க்கு சென்ற கலைஞர் பற்றி அவதூறு பரப்பப்படும் செய்தி தான் அது எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://www.ishafoundation.org/ta/Isha-Foundation/overview.isa

https://www.ishafoundation.org/component/option,com_newscomponent/Itemid,242/act,view/id,966/

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback