அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல்கள் தொடங்க தடை கேரளா அரசு அதிரடி உத்தரவு Govt Employees Banned From Starting YouTube Channel
கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல்கள் தொடங்க தடை, நிதி ஆதாயம் பெறும் செயல் என கூறி நடவடிக்கை
அரசு ஊழியர்கள் சொந்தமாக யூ-டியூப் சேனல் தொடங்கக் கூடாது என்று கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போதய காலகட்டத்தில் பலரும் யூ-டியூப் சேனல் வைத்துள்ளார்கள் , மேலும் அதில் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வீடியோவாக பகிர்ந்து அதி பணம் சம்பாதித்து வருகின்றார்கள்
பொதுவாக ஒரு யூ-டியூப் சேனலை 1000 நபர்கள் subscribe செய்தாலும், 4,000 மணி நேரம் பார்க்கப்பட்டிருந்தால் யூ-டியூப்பில் பணம் சம்பாதிக்கும் தகுதியை பெறுகிறது.
இந்நிலையில், மாநில உள்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில்,
ஒரு அரசு ஊழியர் யூ-டியூப் சேனலை தொடங்குவது, கேரள மாநில அரசின் தொழிலாளர் சட்டம் 1960ன்படி விதிமீறல் ஆகும். தற்போது பின்பற்றப்படும் விதிகள், யூ-டியூப் சேனல் தொடங்குவதற்கு அனுமதிக்காது" என கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் தனியாக யூ-டியூப் சேனல் தொடங்கி அதன் மூலம் பணம் சம்பாதிப்பதை தடுக்கவே கேரள மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Kerala govt says employees cannot have YouTube channels or make money from videos
Govt prohibits employees from starting YouTube channels
Tags: இந்திய செய்திகள்