Breaking News

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு EPS announce candidate for Erode

அட்மின் மீடியா
0

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டிஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு



அதிமுகவை பொறுத்தவரையில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் என இருதரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஈபிஎஸ் தரப்பில் அதிமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் என இபிஎஸ் அறிவித்துள்ளார். 

ஈரோடு  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.2001 முதல் 2006 மற்றும் 2016 முதல் 2021 வரை ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். 

இவர் தற்போது ஈரோடு மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback