Breaking News

budget 2023 மத்திய அரசின் பட்ஜெட்.. சிறப்பம்சங்கள் முழு விவரம் india budget 2023-24 pdf

அட்மின் மீடியா
0

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்குப் பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்



இந்நிலையில் மத்திய அரசின் 2023 - 2024 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று காலை, 11:00 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், பாஜக தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், நடுத்தரப் பிரிவு மக்களை கவர்வதற்கான புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்ப்பாக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இன்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறப்பம்சங்கள் உங்களுக்காக:-

 

திட்டங்கள்:-

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படுகிறது

ஆண்டிற்கு ஏழு லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு இனி வருமான வரி இல்லை, 

ரூ. 3 லட்சம் வரை வரி இல்லை 

ரூ. 3-6 லட்சம் வரை 5 சதவீதம் 

ரூ. 6-9 லட்சம் வரை 10 சதவீதம் 

ரூ. 9-12 லட்சம் வரை 15 சதவீதம் 

ரூ. 12-15 லட்சம் வரை 20 சதவீதம் 

ரூ. 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம்

157 புதிய நர்சிங் கல்லூரிகள் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய இடங்களில் அமைக்கப்படும்.

ஏகலைவா பள்ளிக்கூடம் அதிக அளவில் பிரபலப்படுத்தப்படும். 38,800 ஆசிரியர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிவிக்கப்பட்டுள்ளது  

அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுக்க புதிய இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்படும்.

5ஜி சேவை மேம்பாட்டிற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த தனி செயலி உருவாக்கப்படும்.

மகிளா சம்மான் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்படும், பெண்களின் பெயரில் இரண்டு ஆண்டுகள் சேமிப்பு செய்யும் வகையில் 7% வட்டி வழங்கப்படும் ₹2 லட்சம் வரை சேமிப்பதற்கான புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம்

மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்த புதிய திட்டம் அமல்படுத்தப்படும்

கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அடுத்த ஓராண்டுக்கு நீட்டிப்பு!!! இதனால் 80 கோடி குடும்பங்களுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும்.

ரூ.10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அது சார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் ஹெலிபேடுகள் உருவாக்கப்படும்.

சுங்க வரி அதிகரிப்பு:-

சிகரெட் மற்றும் மற்ற புகையிலைப் பொருட்களுக்கு  16 சதவீதம் வரை வரி உயர்த்தப்படும் 

தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் அதிகரிப்பு! 

கலப்பு ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி வரி 10% இருந்து 25% ஆக அதிகரிப்பு. 

சமையலறை மின்சார புகைபோக்கிக்கான சுங்க வரி 7.5 % இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது.

காப்பர் ஸ்கிராப்புக்கு 2.5 % சலுகை அடிப்படை சுங்க வரி தொடரும் என அறிவிப்பு. 

சுங்க வரி குறைப்பு:-

லித்தியம் ஐயான் பேட்டரி இறக்குமதி வரி குறைப்பட்டுள்ளது. டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5% குறைப்பு. 

டிவி பேனல், செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி, 21% இருந்து 13%-ஆக குறைப்பு 

சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில மொபைல் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படுகிறது.

 

நிதி ஒதுக்கீடு:-

வேளாண் துறைக்கு கூடுதலாக 20 லட்சம் கோடி ரூபாய் கடன் வசதி அளிக்கப்படும்

6000 கோடி கூடுதல் முதலீட்டில் மீன்வளதுறைக்கான கூடுதல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு!!

தோட்டக்கலை துறைக்கு 2,200 கோடி நிதி ஒதுக்கீடு

உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு

மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு 

சிறு, குறு, தொழில்களுக்கு கடன் உறுதி திட்டத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. கடன் வட்டியை 1% குறைக்க முடிவு 

பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு

india budget 2023-24 pdf

https://www.indiabudget.gov.in/doc/impbud2022-23.pdf


Budget 2023 Live Updates

union budget 2023-24 pdf

india budget 2023-24 pdf

budget 2023-24 india pdf

union budget 2023-24 highlights pdf

union budget 2023-24 pdf download

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback