Breaking News

மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற செய்தியை நம்பாதீர்கள் - மின்சார வாரியம் வேண்டுகோள்

அட்மின் மீடியா
0

மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தவறான தகவல் பரவி வருகிறது. அதனை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது


பரவி வரும் தகவல்:-

தற்போது சமூக வலைதளங்களில் 

மின் கட்டணம் கட்டாத காரணத்தால் இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்கிற தகவல் தமிழகம் முழுவதும் எஸ்எம்எஸ், வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி பகிரப்பட்டு வருகிறது. அதில், "உங்களின் கடந்த மாத மின் கட்டண தொகை அப்டேட் ஆகாத காரணத்தால், உங்களின் மின் இணைப்பு இன்று இரவு துண்டிக்கப்படும். இதற்கு உங்களின் மின்சார வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளவும். அல்லது உங்களின் பில் தொடர்பான விவரங்கள் வாட்ஸ் அப்பில் இந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இது தவறான தகவல் என்றும், எஸ்எம்எஸ், வாட்ஸ் அப்பில் வரும் தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்று என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


மின்சார வாரிய அறிவிப்பு:-

Notification 

Dear Consumer Your Electricity Power will be (Disconnected) Tonight At XX:XX From Electricity office Because Your Previous Month Bill was Not Updated Please Immediately Contact With Our Electricity Officer Or Send WhatsApp Payment Screenshot or Bill Details. (+91XXXXXXXXXX) Thank you." 

It is hereby informed to the general public that no such messages are emanated from TANGEDCO and Consumers need not respond to such messages. Consumers are generally requested to Pay EB Bills only through Online OR at EB office Counters in time.


அதிகாரபூர்வ அறிவிப்பு:-

https://www.tangedco.gov.in/alert.html

Tags: FACT CHECK தமிழக செய்திகள் மறுப்பு செய்தி

Give Us Your Feedback