Breaking News

கொசுத்தொல்லையா இந்த நம்பரில் புகார் அளிக்கவும்- மாநகராட்சி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கொசுத்தொல்லைக்கு பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

 


சென்னையில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதனால் அங்கே கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் வந்துள்ளது. இதை தடுக்க சென்னையில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. 

மேலும் உங்கள் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தால் பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் தீவிர கொசு ஒழிப்பு பணியின் ஒரு பகுதியாக 2,919 தெருக்களில் கொசு புகை மற்றும் மருந்துகள் வாகனங்கள் மற்றும் கையால் இயக்கும் இயந்திரங்கள் மூலம் பரப்பப்பட்டு கொசு ஒழிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback