வங்கியில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையனை கழுத்தில் துண்டை போட்டு மடக்கிய முதியவர் - வைரல் வீடியோ
பொம்மை துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளை காட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற கல்லூரி மாணவனை முதியவர் ஒருவர் தான் வைத்திருந்த துண்டை எடுத்து கொள்ளையனின் கழுத்தில் போட்டு மடக்கினார் அவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் பகுதியில் கனரா வங்கியில் நேற்று மதியம் திடீரென்று பர்தா அணிந்திருந்த ஒரு நபர், முகமூடி மற்றும் கையுறை அணிந்து கொண்டு நான் கொள்ளையடிக்க வந்திருக்கிறேன். சத்தம் போட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என கையில் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி கையில் டைம்பாம் இருக்கிறது.சத்தம் போட்டால் வெடிக்க செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார்.
அப்போது வங்கிக்கு வந்திருந்த முதியவர் ஒருவர் தான் வைத்திருந்த துண்டை எடுத்து கொள்ளையனின் கழுத்தில் போட்டு மடக்கினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கொள்ளையனை வாடிக்கையாளர்கள்,வங்கி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து பிடித்தனர்.
அப்போது அவர் வைத்திருந்தது டம்மி துப்பாக்கியும் டம்மி டைம்பாம் என தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது தாராபுரம் அலங்கியம் காந்தி நகரை சேர்ந்த சுரேஷ் (வயது 19) என்பதும், கல்லூரியில் படித்து வரும் அவர் வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பர்தா, முகமூடி, கையுறை அணிந்து மிரட்டியதும் தெரியவந்தது. இதுபற்றி அலங்கியம் வங்கி கிளை மேலாளர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
முதியவர் ஒருவர் துண்டை போட்டு கொள்ளையனை மடக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/newsreporterra1/status/1622161453934583809
Tags: தமிழக செய்திகள்