புது அப்டேட் வாட்ஸ்ப்பில் இனி ஆடியோவை ஸ்டேட்டஸாக வைக்கலாம் எப்படி என தெரிந்து கொள்ள
வாட்ஸப்பில் இனி வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸாக வைக்கலாம்
வாட்ஸப் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கிவருகின்றது அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் ஆடியோவை ஸ்டேட்டசாக வைக்கும் அம்சத்தை தனது பயனாளர்களுக்கு வழங்கி உள்ளது, மேலும் வெகு விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்பட உள்ளது
வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ள புதிய அப்டேட்டில், பயனர்கள் தங்களது குரல் பதிவை 30 வினாடிகள் வைக்கும் ஸ்டேட்டஸில் வைத்துக்கொள்ளலாம்.இந்த தகவலை வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்டேட்டஸ் அம்சத்தில் சில அற்புதமான புதுப்பிப்புகளைச் சேர்த்துள்ளோம். அது எப்படி இருக்கிறது, என்று சொல்லுங்கள். இப்போது நீங்கள் சிரமமின்றி உங்கள் குரல்களை பதிவு செய்து ஸ்டேட்டஸில் பகிரலாம் என்று வாட்ஸ்அப் ட்வீட் செய்துள்ளது.
வாட்சப் பயனர்கள் இந்த புதிய அம்சத்தை ஸ்டேட்டஸ் பிரிவின் டெக்ஸ்ட் பகுதியில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தொழில்நுட்பம்