Breaking News

லண்டனில் 2ம் உலகபோரின் போது வீசபட்ட வெடிகுண்டு செயல் இழக்கவைக்கும் போது வெடித்து சிதறிய வீடியோ World War 2 era bomb explodes in UK

அட்மின் மீடியா
0

இரண்டாம் உலகபோர் கடந்த 1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. உலக நாடுகளில் பெரும்பாலானவை இதில் பங்கெடுத்தன. இவை அச்சு நாடுகள் மற்றும் நேச நாடுகள் என இரண்டு எதிரெதிர் இராணுவக் கூட்டணிகளை உருவாக்கின. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒரு அணியாக இணைந்து போரிட்டன. அவை அச்சு நாடுகள் எனப்பட்டன. எதிரணியில் பிரிட்டன், ஃபிரான்ஸ், ரோலாந்து ஆகிய நாடுகள் இருந்தன. இவை நேச நாடுகள் என்று அழைக்கப்பட்டன. பின்னர் சோவியத் ஒன்றியமும் (இன்றைய ரஷ்யா) ஜெர்மனிக்கு எதிராக நேச நாடுகளுடன் இணைந்தது.மனித வரலாற்றில் இதுவரை அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய சண்டையாக இரண்டாம் உலகப் போர் திகழ்கிறது. 7 முதல் 8.5 கோடிப் பேர் இதில் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குடிமக்களாக இருந்தனர்..


இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் ஜெர்மனி மீது குண்டுகளை வீசின.பதிலுக்கு ஜெர்மனியும் எதிரி நாடுகள் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இப்படி வீசப்பட்ட குண்டுகள் பலவும் வெடிக்காத நிலையில், தற்போது வரை உலகம் முழுவதும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து சுமார் 94 மைல் தொலைவில் இருக்கும் நார்போக் என்ற நகரத்தில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டறியப்பட்டது. உடனடடியாக செயல் இழக்க வைக்கும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் எதிர்பாரதவிதமாக திடிரென வெடிகுண்டு வெடித்து சிதறியது. வெடிகுண்டு வெடித்ததும் அப்பகுதி சில நிமிடங்கள் புகை மண்டலம் ஆனது போல காட்சி அளித்தது. 

வெடிகுண்டு வெடித்த காட்சிகளை நார்போக் நகர காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் வெடிகுண்டை செயல் இழக்க வைக்கும் பணி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. எனினும் எந்த வித உயிர்சேதமோ, யாருக்கும் காயமோ எற்படவில்லை. இருந்தாலும் வெடி குண்டு வெடித்ததால் அங்கு ஏற்பட்ட பொருட்சேதம் குறித்து மதிப்பிட்டு வருகிறோம். என்று தெரிவிக்கப்பட்டது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/theinformantofc/status/1624414433651920897

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback