பெண்களுக்கான உதவி எண் 181 விழிப்புணர்வு வீடியோ Women Helpline Number 181
பெண்கள் தங்கள் செல்போனில் ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர், ஷாப்பிங் ஆப், டேட்டிங் ஆப், என பல ஆப்களை வைத்துள்ள இளம் தலைமுறையின் 181 என்ற எண்ணை சேமித்து வைத்துக் கொள்வது மிக மிக அவசியமானது ஆகும்.
பொதுவாக நம் அனைவருக்கும் 100, 101, 108 போன்ற பல்வேறு அவசர கால தொலைபேசி அழைப்பு எண்கள் பற்றி தெரியும் அதுபோல் பெண்களுக்கு என தனியாக உள்ள 181 என்ற எண் பற்றி பலருக்கும் தெரியவில்லை
181 என்ற இந்த உதவி எண் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குடும்ப வன்முறை, வரதட்சிணை கொடுமை, பாலியல் தொல்லை, உடல் - மனநல பாதிப்பு, என அனைத்திற்க்கும் பயன்படுத்தலாம்
தற்போது திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள ஓர் விழிப்புணர்வு வீடியோவில் அதன் முழு தகவலையும் பெறலாம்
வீடியோ பார்க்க:-
Tags: தமிழக செய்திகள்