Breaking News

மின்கம்பங்களில் உள்ள கேபிள் டிவி வயர்களை 15 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் -மின்வாரியம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

மின்கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள்; 15 நாள்களுக்குள் அகற்ற வேண்டும்!" - மின்வாரியம் உத்தரவு


மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று மின்சார வாரியம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மின் கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள், விளம்பரப் பலகைகள் கட்டி வைப்பதன் மூலம் விபத்துக்கள் நேரிட வாய்ப்பு உள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ebcablewiredஇந்த உத்தரவை பின்பற்றாமல் விபத்து ஏதும் ஏற்பட்டால் அந்த பகுதியின் மின்வாரிய பொறியாளரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தமிழக அரசின் மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழக மின்வாரியம் அனைத்து தலைமை பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், 

மின் கம்பங்களில் கட்டிய கேபிள் வயர்களை அகற்ற மின்சார வாரியம் அதிரடி உத்தரவு!மனித உயிர்களுக்கு ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க, கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள்/தனியார் ஆபரேட்டர்கள் மூலம் மின்வாரியத்தின் கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் டிவி வயர்கள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.இவ்வாறு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், சில பகுதிகளில், கேபிள் டிவி வயர்கள் மின்வாரியத்தின் மின்கம்பங்களில் கட்டப்பட்டிருப்பது கவனிக்கப்படுகிறது.

மனித உயிர்களுக்கு ஏற்படும் அசம்பாவித மின் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக, கம்பங்களில் இருக்கும் கேபிள் டிவி வயர்களை 15 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என நோட்டீஸ் வழங்க வேண்டும்.

சுற்றறிக்கை விநியோக வட்டங்களில் இருக்கும் அனைத்து மின்வாரிய அதிகாரிகளும் இது தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும். 

புகார்களுக்கு இடமளிக்காமல் செயல்பட வேண்டும். 

வாரியத்தின் மின்கம்பங்களை தவறாகப் பயன்படுத்துவதற்காக கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள்/தனியார் ஆபரேட்டர்களைக் கட்டுப்படுத்தவும், மின்வாரியத்தின் கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் அனைத்து கேபிள் டிவி வயர்களும் அகற்றப்படுவதை உறுதிசெய்யவும் பிரிவு அதிகாரியால் அடிக்கடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதை ஒவ்வொரு மாதமும் நிர்வாகப் பொறியாளர் / விநியோக பொறியாளர் தவறாமல் கண்காணிக்க வேண்டும். மேற்கண்ட அறிவுறுத்தல்களை மீறுவதால் ஏதேனும் மின் விபத்துகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கள அலுவலர்கள் பொறுப்பாவார்கள். அனைத்து விநியோக மண்டலங்களின் தலைமைப் பொறியாளர்கள் ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை மதிப்பாய்வு செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback