Breaking News

தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரி - ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்திற்க்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு tamilnadu

அட்மின் மீடியா
0

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என அழைப்பதை விடுத்து தமிழகம் என அழைப்பது சரியாக இருக்கும் என தெரிவித்திருக்கும் கருத்து பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது



காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பேசிய அவர்,

தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் எனப் பேசினார். 

ஆளுநர் ரவியின் இந்த கருத்திற்க்கு கட்சி மாறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

சமூகவலைதளங்களிலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து #தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 

தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று சொல்வதே சரி” என்ற ஆளுநர் ரவியின் பேச்சு குறித்து, உங்கள் கருத்து என்ன? கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback