புதிய ஆதார் மற்றும் ஆதார் திருத்தம் செய்ய அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்கள் முழு விவரம் Special Aadhaar camp at head post office
அட்மின் மீடியா
0
UIDAI இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பான சேவைகளை பெற்றிடவும் பயன்படுகிறது. இந்நிலையில் மத்திய மின்னணு தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.
அதன் பேரில் ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும். அதுசமயம், கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள அடையாள சான்று (Pol-proof of Identity ) மற்றும் முகவரி சான்று POA - (Proof OF Address) ஆகியவற்றை புதுப்பித்துக்கொள்ள 01) வாக்காளர் அடையாள அட்டை 2) குடும்ப அட்டை, 3) ஓட்டுநர் உரிமம், 4) பான் கார்டு, 5) வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையத்தினை அணுகலாம். அல்லது மை ஆதார் என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேற்படி ஆதார் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 38 அஞ்சலகங்களிலும் 04.02.2023 வரை சிறப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி ஆதார் சிறப்பு முகாமிற்கு வரும் பொதுமக்கள் ஆதார் புதுப்பித்திட தேவையான ஆவணங்களான 1) வாக்காளர் அடையாள அட்டை 2) குடும்ப அட்டை, 3) ஓட்டுநர் உரிமம், 4)பான் கார்டு. 5)வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புதுப்பித்தல் கட்டணம் ரூ.50 ஆகியவற்றுடன் தங்களின் ஆதார் அட்டைகளை புதுப்பித்து பயன்பெறுமாறு அறிவித்துள்ளார்கள்
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி