Breaking News

பொங்கல் சிறப்புரயில்கள் ரயில்வே அறிவிப்பு முழுவிவரம் - pongal special train

அட்மின் மீடியா
0

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட முக்கிய நகர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி 


தாம்பரம் - நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் (06049) ஜனவரி 14ஆம் தேதியன்று தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு நெல்லை வந்து சேரும்.

அதேபோல், மறு மார்க்கத்தில் (06050) நெல்லையில் இருந்து ஜனவரி 18 ஆம் தேதியன்று மாலை 05.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்


தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 அன்று இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். 

ரயில் (06077)  கோவையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் திண்டுக்கல் - கோவை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06078) திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை சென்று சேரும். 


கிழக்கு ரயில்வே ஜனவரி 12, 2023 முதல் ஜனவரி 17, 2023 வரை 12 கலோப்பிங் EMU மேளா சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில் சீல்டா தெற்கு, கொல்கத்தா நிலையம், லக்ஷ்மிகாந்தபூர், நம்கானா மற்றும் காக்ட்விப் ஆகிய இடங்களில் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு இயக்கப்படும். இதுதவிர இஎம்யூ மேளா சிறப்பு ரயில்கள் பாலிகங்கே, சோனார்பூர், பருய்பூர், லக்ஷ்மிகாந்தபூர், நிச்சிந்தாபூர் மற்றும் காக்ட்வீப் நிலையங்களில் நின்று செல்லும். இருப்பினும் கொல்கத்தா நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் கொல்கத்தா மற்றும் மஜேர்ஹாட் இடையே உள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும்.மகர சங்கராந்தி சிறப்பு:மகரசங்கராந்தி பண்டிகையின் போது பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, 

ரயில் எண் - 06021 / 06022 தாம்பரம் - திருநெல்வேலி - சென்னை எழும்பூர் 

ரயில் எண் - 06044 / 06043 - கொச்சுவேலி - தாம்பரம் 

இரயில் எண் - 06046 / 06045 எர்ணாகுளம் - டாகடர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல்

இரயில் எண் 06057 / 06058 தாம்பரம் - திருநெல்வேலி - தாம்பரம்

ஜனவரி 14ஆம் தேதி சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லைக்கும் , 

ஜனவரி 18ஆம் தேதி நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback