Breaking News

செய்முறை தேர்வில் மாற்றம் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

10,11,12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 6ம் தேதி முதல் 10 ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேதிகளில் மாற்றம் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 


இதுகுறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத்தேர்வுகளுக்கும் செய்முறை தேர்வுகளுக்கும் இடைபட்ட நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே தேதி மாற்றி அமைக்கப்படுகிறது. 

திட்டமிட்டபடி பொது தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

தேர்வுகள்:-

10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 நடைபெறும் என்றும், 

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும்  எனவும்

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும், என்றும் அறிவிக்கப்பட்ட்டுள்ளது

தேர்வு முடிவுகள்:-

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ம் தேதியும் 

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதியும்

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், 

வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback