Breaking News

சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய விதிகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாடும் செல்வாக்கும் அதிகரித்து வருவதால் அவற்றில் விளம்பரங்கள் செய்வதற்கு மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.இந்த புதிய விதிகளை பின்பற்ற மறுத்தால் ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் அதிக ஃபாலோயர்களை கொண்ட சமூக ஊடக பிரபலங்கள், ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை புரமோட் செய்தால், அதற்கு கைமாறாக, பரிசு பொருட்கள், நிறுவனத்தில் பங்கு, இலவச பயணங்கள் என தாங்கள் பெறும் சலுகைகளை விளம்பர வீடியோவில் குறிப்பிட வேண்டும். தவறும்பட்சத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக பயன்பாட்டாளர்கள், ஏதேனும் சேவைகள் அல்லது திட்டங்கள், பொருட்களை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை வெளியிடும்போது, சலுகைகள் மற்றும் பெற்ற விருதுகள் ஆகிய விவரங்களை வெளியிட வேண்டும். 

லைவ் நிகழ்ச்சியாக இருந்துபோதும் இந்த நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த விளம்பரங்கள், செய்திகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊடக ஆசிரியர்களின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு:-

மத்திய அரசின் இந்த புதிய சட்ட திருத்தத்தை Editors Guild of India (ஊடக ஆசிரியர்களின் கூட்டமைப்பு) கடுமையாக எதிர்க்கிறது. இத்தகைய விதிமுறைகள் ஊடகங்களுக்கு சென்சார் போன்றவை. இதனால் பத்திரிக்கை சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் ஊடகங்களின் சுதந்திரம் கேள்விக்குள்ளாகும். செய்திகளை நேரடியாக மத்திய அரசு கண்காணிப்பதை இந்த சட்டவிதிகள் உறுதி செய்கின்றன. மத்திய அரசுக்கு எதிரான செய்திகளை, விமர்சனங்களை நீக்க இந்த நடைமுறை வாய்ப்புகள் வழங்குகின்றன. எனவே மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என Editors Guild of India கோறுகிறது. பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்காத வகையில், ஜனநாயகத்திற்கு உகந்த வழியில் அரசு முடிவெடிக்க வேண்டும் Editors Guild of India கேட்டுக் கொள்கிறது’’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback