ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு திமுக அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவேரா திருமகன் மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தி விதிகள் அமலுக்கு வந்துள்ளது. என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார் என சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.
மனுத்தாக்கல் தொடக்கம் : ஜனவரி 31ம் தேதி
மனுத்தாக்கல் கடைசி நாள் : பிப்ரவரி 7 ம் தேதி
மனுக்கள் பரிசீலனை : பிப்ரவரி 8ம் தேதி
வாபஸ் பெற கடைசி தேதி : பிப்ரவரி 10ம் தேதி
வாக்குப்பதிவு நாள்: பிப்ரவரி 27 ம் தேதி
வாக்கு எண்ணிக்கை நாள்: மார்ச் 2 ம் தேதி
இந்நிலையில் 2023ஆம் ஆண்டு வரும் பிப்ரவரி திங்கள் 27ஆம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து பேசி, ஏற்கனவே 2021ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றக் காரணத்தால், தற்போது இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள்