Breaking News

நடுரோட்டில் பட்டபகலில் பைக்கில் 71 வயது முதியவரை தரதரவென இழுத்து சென்ற இளைஞர் அதிர்ச்சி வீடியோ Rogue scooterist drags old man in Bengaluru

அட்மின் மீடியா
0

71 வயது முதிய கார் ஓட்டுனரை பைக்கில் சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற இளைஞர் வைரல் வீடியோ


பெங்களூருவில், கார் மீது இடித்த ஸ்கூட்டரில் வந்தவரை தட்டிக் கேட்ட போது, 71 வயது நபரை ஸ்கூட்டரில் இழுத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான் அதிர்ச்சி விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது

இன்று மதியம் மேற்கு பெங்களூருவில், மகடி டோல் கேட் அருகே சாஹூல் என்ற  நபர் தனது இருசக்கர வாகனத்தில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது தனக்கு முன்னால் சென்ற பொலிரோ காரின் பின்னால் மோதிவிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். உடனே கார் டிரைவர் மற்றும் உரிமையாளர் முத்தண்ணா கீழே இறங்கி சாஹூலிடம் சென்று கேட்கும் போது அவர் தப்பிக்க நினைத்து பைக்கினை எடுத்து செல்ல முற்பட்டபோது அவரது ஸ்கூட்டரின் பின்புற கைப்பிடியைப் பிடித்துள்ளார். ஆனால் சாஹூல் ஸ்கூட்டரை நிறுத்தாமல் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வரை அவரை இழுத்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தை சாலையில் பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர் 

பைக் ஒட்டியவரை நிறுத்து சாலையில் சென்றவர்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருசக்கர வாகனஓட்டியை கைது செய்தனர்.

காயமடைந்த முதியவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது


வீடியோ பார்க்க:-

https://twitter.com/rakeshprakash1/status/1615291787878465537


Scooterist hits car while driving on wrong side

drags driver

Rogue scooterist drags old man in Bengaluru 

Bengaluru

Magadi Road

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback