நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 30 மற்றும் 31 ம்தேதி வேலை நிறுத்தம் 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்!! bank strike
ஐந்து நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்துதல், அனைத்து பணியாளர்களிலும் போதுமான ஆட்சேர்ப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றுதல் மற்றும் பிறவற்றைக் கோரி ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU), நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது
மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எந்தவித உறுதியான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சமரச பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய வங்கிகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அது குறித்த எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால், வங்கி ஊழியர்கள் அனைவரும் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 30 மற்றும் 31ம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஜனவரி 28ம் தேதி மாதத்தின் 4ம் சனிக்கிழமை விடுமுறை தினம்.
ஜனவரி 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறை தினம்,
ஜனவரி 30ம் தேதி திங்கட் கிழமை, வேலை நிறுத்தம்
ஜனவரி 31 செவ்வாய் கிழமை வேலை நிறுத்தம்
என தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்