Breaking News

இரட்டை இலை சின்னம்:- ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது



ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அதேபோல் விஜயகாந்தின் தேமுதிக சார்பில் அதன் மாவட்ட செயலாளர் மகேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அம்முக சார்பில் ஈரோடு கிழக்கு நகர மாவட்டச் செயலாளர் சிவபிரசாத் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார் என்று தினகரன் அறிவித்துள்ளார்

இந்நிலையில் அதே போல அதிமுக  இபிஎஸ் தரப்பில் யார் வேட்பாளர் எனவும், ஓபிஎஸ் தரப்பில் யார் வேட்பாளர் எனவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை
 
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு முறையீட்டு மனுவை அளித்துள்ளது. அதில் வரும் இடைத்தேர்தலில் நாங்கள் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். அதிமுகவின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன் பெயரில் நான் கையெழுத்திட்ட விருப்ப மனுவை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. 

வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நாங்கள் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் எனவும் ஈரோடு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் உச்சநீதிமன்ற மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.
 
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் தினேஷ், மகேஷ்வரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரட்டை இலை சின்னம் ஒதிக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக 3 நாட்களில் பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback