Breaking News

27ம் தேதி முழுவதும் உள்ளூர் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு local holiday

அட்மின் மீடியா
0
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வரும் 27ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு


பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, வரும், 27ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ிண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின், பிரதான கோவிலான மலைக்கோவில் கும்பாபிஷேகம், வரும் 27ம் தேதி நடக்க உள்ளது.அன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, மாநில அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் தேர்வுகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், கல்வி நிறுவனங்களுக்கும், உள்ளூர் விடுமுறை அறிவிக்க, மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்., 25ல் பணி நாளாக அறிவிக்கவும், உள்ளூர் விடுமுறை நாளில், அவசர அலுவல்களை கவனிக்க, மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்பட, தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என, மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-


பார்வை மூன்றில் படிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் 09.01.2023-ஆம் நாளிட்ட கடிதத்தில் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் பிரதான கோவிலான மலைக்கோவில் குடமுழுக்கு விழா 27.01.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுவதால் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து சுவாமி தரிசனம் செய்யவும், குடமுழுக்கு விழாவினை காண்பதற்கும் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் குடமுழுக்கு விழா நடைபெறும் நாளான 27.01.2023 (வெள்ளிக்கிழமை) அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க தகுந்த ஆணைகள் பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

2. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் பிரதான கோவிலான மலைக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் 27.01.2023 (வெள்ளிக்கிழமை) அன்று அம்மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் (பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறை அறிவிக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. மேலும், அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, 25.02.2023 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தப்படுகிறார்.

3. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act. 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு. அம்மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடு செய்யுமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback