Breaking News

ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு tntet hall ticket 2023 download

அட்மின் மீடியா
0

ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு tntet hall ticket 2023 download

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022, நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II ற்கான கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 31.01.2023 முதல் 12.02.2023 வரை இருவேளைகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என 03.012023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிகைச் செய்தி வெளியிடப்பட்டது.



தற்போது 03.02.2023 முதல் 14.02.2023 வரையிலும் நடைபெற உள்ள கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை (Schedule) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

தற்போது, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு1 (District - Admit Card-I) இன்று 27.01.2023 முதலும் தேர்வு மையம் (இடம்) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு-2 Venue - Admit Card-II) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nicin ல் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


tntet hall ticket download

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback