Breaking News

மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு.! தமிழக அரசு அறிவிப்பு.! 100 tax free battery vehicle

அட்மின் மீடியா
0

பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 


பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு வாகன கொள்கை 2019-இன் படி டிசம்பர் 31, 2026 வரையில் 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படுகிறது என தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த 100 சதவீத வரிவிலக்கானது தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரி விதிப்புச் சட்டம் 1974 மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மின்சார இரு சக்கர வாகனங்களுக்கும், மின்சார நான்கு சக்கர வாகனங்களுக்கும் 50 சதவிகிதம் வரி விலக்கு அளித்து முன்னதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பேட்டரியில் இயங்கும் அனைத்து மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback