கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதுதான்! சீனாவின் வூஹான் ஆய்வக விஞ்ஞானி தகவல் The Truth about Wuhan
கொரானா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என சீனாவில் உள்ள வூஹான் ஆய்வக விஞ்ஞானி தனது புதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
உலகை நிலைகுலைய செய்த கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்தாலும் கூட இன்னுமே கொரோனா குறித்துப் பல மர்மங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை
முதலில் கொரானா வௌவாலில் இருந்து பரவியதாகக் கூறுகின்றனர். அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட வௌவாலில் பூனை தின்றதாகவும்.. அதன் கறியை மனிதர்கள் உண்ணும் போது கொரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில்
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் சீனாவில் உள்ள வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகின்றார் இவர் தற்போது தி ட்ரூத் அபவுட் வூஹான் The Truth about Wuhan என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.
அதில், கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியேறியதுதான். அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் என நியூயார்க் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
மேலும் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்தது. வைரஸ் ஆராய்ச்சி பற்றிய சோதனைகள் போதிய பாதுகாப்பின்றி அங்குநடத்தப்பட்டன. இத்தகைய வெளிநாட்டு ஆய்வகங்களில் போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை.என தெரிவித்துள்ளார்
news Source:-
https://nypost.com/2022/12/03/scientist-who-worked-at-wuhan-lab-says-covid-man-made-virus/
Tags: வெளிநாட்டு செய்திகள்