வெளி மாநிலங்களில் இருந்து கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை - திருநெல்வேலி காவல்துறை எச்சரிக்கை Tirunelveli District Police
அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் கழிவுகளை திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி காவல் சரக துணைத்தலைவர் அவர்கள் எச்சரிக்கை.
திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் அண்டை மாநிலங்களிலிருந்து கோழி கழிவுகள், மீன் கழிவுகள், மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகள் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய கழிவுகளை யாரேனும் வாகனத்தில் ஏற்றி வந்து கொட்டினாலோ அல்லது ஏஜென்டுகள் மூலம் கழிவுகளை வாகனத்தில் கொண்டு வந்து சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் குழி தோண்டி புதைத்தாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், இடத்தின் உரிமையாளர்கள் மீதும் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.ம ேலும் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு காய்கறி கொண்டு செல்லும் வாகனங்கள் காய்கறிகளை இறக்கிவிட்டு பின்னர் திரும்பி வரும்போது வாகனத்தின் உரிமையாளர்களுக்கே சில சமயங்களில் தகவல் தெரிவிக்காமல் மேற்படி கழிவுகளை கொண்டு வந்து சரகத்திற்குள் கொண்டு வருவதாக தெரியவருகிறது. இவ்வாறு மேற்படி கழிவுகளை யாரேனும் மாவட்டத்திற்குள் கொண்டுவருவது தெரியவந்தாலோ அல்லது கழிவுகளை கொட்டினாலோ கீழ் கண்ட எண்ணிற்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அல்லது WhatsApp- மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று திருநெல்வேலி சரக துணை தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம்:
0462-2906025
(WhatsApp) :9952740740
தென்காசி மாவட்ட காவல் அலுவலகம்:
9489003324,
WhatsApp - 9385678039
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம்:
0461-2340200,
(WhatsApp) - 9514144100
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகம்:
04652-220167,
WhatsApp -7010363173
Tags: தமிழக செய்திகள்