Breaking News

ரேஷன் கடை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்முகதேர்வுக்கு எடுத்து செல்லவேண்டிய ஆவணங்கள் என்ன முழுவிவரம் ration shop job interview

அட்மின் மீடியா
0

தமிழக ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இப்பணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

 


இணையதளம் வாயிலாக நவம்பர் 14 ஆம் தேதி வரை விண்ணப்பித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக நவம்பர் 30ம் தேதி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கணினிவழி விண்ணப்பத்தில் (Online Application) குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளுக்கான அனைத்து மூலச்சான்றிதழ்களையும் (Original Certificates), அவற்றின் சுய சான்றளிக்கப்பட்ட இரண்டு ஒளி நகல்களையும் (self attested photo copies) தவறாமல் கொண்டு செல்லவேண்டும், அதாவது

1.பிறந்த தேதிக்கான சான்றிதழ் (SSLC/ HSC Mark Sheet)

2 கல்வித்தகுதிகளுக்கான சான்றிதழ் 13.10.2022 நாளிட்டமாவட்டஆள்சேர்ப்பு நிலைய அறிவிக்கையில் உள்ளவாறு.

3. சாதிச் சான்றிதழ்

 4. நீங்கள் முன்னாள் இராணுவத்தினர் என்றால் அதற்க்கான சான்றிதழ் (இராணுவத்தினரின் மனைவி/மகன்/மகள் - முன்னாள் இராணுவத்தினராகக் கருதப்பட மாட்டார்.) 

5 நீங்கள் மாற்றுத்திறனாளிகள் என்றால் அரசால் வழங்கப்பட்ட பதிவு புத்தகம், மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. நீங்கள் ஆதரவற்ற விதவை  என்றால் அதற்க்கான சான்று. இத்தகைய விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் / உதவி ஆட்சியர் / சார் ஆட்சியரிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் சான்றிதழைப் பெற வேண்டும். விவாகரத்து பெற்றவர் ஆதரவற்ற விதவையாகக் கருதப்படமாட்டார்

7. Passport Size போட்டோ 2

8. நீங்கள் ஏதேனும் பணியில் இருந்தால் அங்குஇருந்து தடையின்மைச் சான்றிதழ் (NOC). (தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் தலைவரின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையுடன் கூடியது).

9. தமிழ் வழியில் படித்திருந்தால் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்

10. முதல் தலைமுறை பட்டதாரி என்றால் அதற்க்கான சான்றிதழ்

ஆகியன கொண்டு செல்ல வேண்டும்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback