Breaking News

குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரம் கேட்கக்கூடாது – ரேஷன் கடைகளுக்கு சுற்றறிக்கை ration shop aadhar link

அட்மின் மீடியா
0

குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்கவோ, ஆதார் அட்டை நகலை பெறவோ கூடாது என ரேஷன் கடைகளுக்கு  உணவுத்துறை சுற்றறிக்கை

உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் 14 லட்சத்து 86 ஆயிரத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு வங்கி கணக்கு எதுவும் இல்லை.எனவே அவர்களுக்கு வங்கி கணக்கை தொடங்க வேண்டும். இவர்களில் யாராவது வங்கி கணக்கு ஏற்கனவே வைத்திருந்தால் அந்த விவரங்களை பெற வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்கள் அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையை நேரில் அணுகி ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

மேலும் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள், புதிய வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை அவர்களின் நியாய விலை கடையில் பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். 

ஏற்கனவே வங்கிக் கணக்கு இருந்தால், அந்த குடும்ப அட்டைதாரர்களை அந்த வங்கிக்குச் சென்று அவர்களின் ஆதார் நம்பரை இணைக்க அறிவுறுத்த வேண்டும், குடும்ப அட்டை தாரர்களிடம் இருந்து எந்த காரணத்தை கொண்டும் துறை அலுவலர்கள் ஆதார் எண்ணையோ, ஆதார் அட்டையின் நகலையோ பெறக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback