Breaking News

விஜய் டிவியில் நடிக்க வாய்ப்பு என போலியான நபர்களிடம் எச்சரிக்கை| விஜய் டிவி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழின் முன்னணி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி, நாங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தோன்றுவதற்கான வாய்ப்பை வழங்கப் பணம் வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.


அனைவரின் கவனத்திற்கு 

எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்காக டிஸ்னி ஸ்டார் மற்றும்/அல்லது ஸ்டார் விஜய் (“அலைவரிசை"), அல்லது தயாரிப்பாளர்கள் அல்லது தயாரிப்பு ஸ்டார் விஜய் (“அலைவரிசை"), அல்லது தயாரிப்பாளர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனம் பணம் கேட்பதில்லை, மேலும் எந்த ஒரு நபர்(கள் ) மற்றும்/அல்லது நிறுவனம் மற்றும்/அல்லது அமைப்பு ஆகியோருக்கு எங்கள் அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தோன்றுவதற்கான வாய்ப்பை, பணம் செலுத்தியோ அல்லது வேறு வகையிலோ, வழங்கவோ/செயல்படுத்தவோ நாங்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை. 

ஸ்டார் விஜய் பெயரைப் பயன்படுத்தி வரும் இத்தகைய போலியான வாய்ப்புகள் மற்றும் அழைப்புகளிலிருந்தும் மற்றும் /அல்லது இந்த அலைவரிசையின் பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு நபர்/நிறுவனம்/ அமைப்பு போன்றவை எங்களுடைய எந்த ஒரு நிகழ்ச்சியிலாவது நடிக்கவோ/தோன்றவோ வாய்ப்பைஉறுதியளித்து தனிப்பட்ட தகவல்களையோ, புகைப்படங்களையோ, காட்சித் துணுக்குகளையோ அல்லது பணத்தையோ கோருபவர்களிடமிருந்தும் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம். 

இத்தகைய தவறான பகிரப்பட்ட தனிப்பட்ட தகவல்களால் உங்களுக்கு ஏற்பட்ட மற்றும்/அல்லது  நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் உங்களால் செலுத்தப்பட்ட பணம் அல்லது ஏற்படக்கூடிய எந்த விதமான இழப்பு/சேதம் ஆகியவற்றுக்கு இந்த விஜய்நிறுவனம் மற்றும்/அல்லது அலைவரிசை எந்த ஒரு விதத்திலும் பொறுப்புள்ளதாகவோ மற்றும்/அல்லது கடமைப்பட்டுள்ளதாகவோ இருக்காது. என விஜய் டிவி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback