Breaking News

கொரானா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

அட்மின் மீடியா
0

தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என மத்திய சுகாதார இயக்குனரகத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

சீனாவில் பரவிவரும் BF7 ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும், புதியவகை கொரோனாவின் தன்மைகள் குறித்து கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.சீனாவை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் மாறுபாடு இந்தியாவிலும் நுழைந்தது. குஜராத்தில் 2 மற்றும் ஒடிசாவில் ஒரு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் வெளிநாட்டு விமான பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை வழிகாட்டுதல்கள வழங்க வேண்டும். 

மேலும் தமிழகத்தில் ஏற்கெனவே 97 சதவீதம் முதல் தவணை, 92 சதவீதம் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன. கரோனாப் பரவலைப் பொருத்தவரை தமிழகம் மிகவும் பாதுகாப்பான மாநிலமாகத்தான் உள்ளது. எனவே, இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தமிழக விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback