ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்!
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனவரி மாதம் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 2023ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்கிறார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிப்பது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடைமுறை
ஜனவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் கவர்னர் உரையின்போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
மற்றும் தமிழகத்தில் தொடங்கப்பட வேண்டிய புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
Tags: தமிழக செய்திகள்