Breaking News

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! அனைத்து மாநிலத்திற்க்கும் மத்திய அரசு அலர்ட் முழு விவரம் again spread covid

அட்மின் மீடியா
0

உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், 

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னமும் இருக்கிறது. 

இந்தியாவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்றும் நாடு முழுவதும்  ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மாநிலங்கள் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும்

கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் 

என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் கொரோனா நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மற்றும் நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது BF 7 எனப்படும் வைரஸ் மற்ற இடங்களில் பரவுவதை விட சீனாவில் வேகமாகப் பரவுகிறது. இதனால் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது மேலும் சீனாவில் கொரோனாவால் 60 சதவீதம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback