கிராம உதவியாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி- முழு விவரம் 2748 village assistant recruitment 2022 hall ticket
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணிக்கு டிசம்பர் 4 ஆம் தேதி தேர்வு நடைப்பெறவுள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டை தற்போது இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்களை கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது
இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதி சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், கைபேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். காலை 9.50-க்கு பின் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 10.50-க்கு முன்னர் தேர்வு அறையை விட்டு வெளியேறி அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அனுமதி சீட்டு இன்றி எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பதார்கள் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த் வேண்டும்.
அனுமதிச்சீட்டு மற்றம் கருப்பு பால்பாயின்ட் பேனாவை தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் கொண்டுவரக்கூடாது.
விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டுவரக்கூடாது,
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய:-
https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174
Tags: வேலைவாய்ப்பு