Breaking News

நாடு முழுவதும் சிம் கார்டுகள் 24 மணி நேரத்திற்கு செயல்படாது புதிய விதிமுறை new rule sim card

அட்மின் மீடியா
0

செல்போன் சிம்கார்டுகளை வைத்து நடைபெறும்  சிம் ஸ்வாப் மோசடி மூலம் வாடிக்கையாளர்களின் முக்கிய தகவல்களை திருடுகின்றார்கள் இதனை தடுக்கும் விதமாக, நாட்டில் இனி புதிய சிம்கார்டுகளை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு கிடைத்த 24 மணி நேரத்திற்கு அந்த சிம் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது

அதாவது, புதிய சிம்கார்டு முதல் 24 மணி நேரத்தில் இன் கம்மிங், அவுட் கோயிங் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை செயல்படுத்த முடியாது.

புதிய சிம் கார்டு வாங்கிய 24 மணி நேரத்தில் வாடிக்கையாளர் சரிபார்ப்பை தொலைத்தொடர்பு துறை செய்யும்இவ்வாறு சரி பார்ப்பு நடவடிக்கை மேற்கொள்வதால் மோசடிகள் குறைக்கப்படும் என தொலைத்தொடர்பு துறை நம்புகிறது

எனவே அனைத்து டெலிகாம் யூசர்களுக்கும் டெலிகாம் துறை புதிய விதியை வெளியிட்டுள்ளது. புதிய சிம் கார்டு செயல்படுத்தப்பட்ட பிறகு 24 மணிநேரம் செயல்படாது. அதாவது, சிம் இயக்கப்பட்ட 24 மணிநேரத்திற்கு இன்கமிங், அவுட்கோயிங் மற்றும் எஸ்எம்எஸ் வசதி செயல்படாது. சிம் கார்டு மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவும் தொலைத்தொடர்பு துறையின் புதிய விதியை அமல்படுத்த அனைத்து டெலிகாம் கம்பெனிகளுக்கும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. என தொலைத்தொடர்பு துறை கூறியுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback