Breaking News

டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட 2023 ம் ஆண்டு தேர்வு அட்டவணை - முழு விவரம் TNPSC 2023

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையமான டிஎன்பிஎஸ்சி , தமிழக அரசு காலிப்பணியிடங்களில் பெரும்பாலான பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது
 
கடந்த சிலநாட்களுக்கு முன்பு 2023 ம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பட்டியலை வெளியிட்டது. அதில் குரூப் 1 தேர்வு அட்டவணை குறிப்பிடப்படாமல் இருந்தது.
 
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 2023ல் வெளியிடப்படும் எனவும் முதல்நிலை தேர்வு நவம்பர் மாதமும், முதன்மை தேர்வு ஜூலை 2024ல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குரூப் 1 தேர்வு முதல்நிலை தேர்வு முடிவுகள் 2024 மார்ச் மாதமும், முதன்மை தேர்வு முடிவுகள் 2024 நவம்பர் மாதமும் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


 
TNPSC annual recruitment planner 2023
 
TNPSC exam schedule 2023

TNPSC Calendar 2023

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback