Breaking News

ஜனவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு local holiday

அட்மின் மீடியா
0

திருச்சி மாவட்டத்திற்க்கு ஜனவரி 2ம் தேதி விடுமுறை அறிவிப்பு அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இந்த விடுமுறைக்கு பதில் ஜனவரி 7-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 2-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதனையொட்டி, ஜனவரி 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஆயினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 07.01.2023 சனிக்கிழமை அன்று வேலை நாள் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback